முன்னாள் அமைச்சர் ஆர்.பி.  உதயகுமார்  முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசியதாகபுகார் மனு

by Admin / 11-08-2026 01:23:40am
 முன்னாள் அமைச்சர் ஆர்.பி.  உதயகுமார்  முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசியதாகபுகார் மனு

தூத்துக்குடியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.  உதயகுமார்  முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாகவும் அவதூறு  பேசியதாக தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். முதலமைச்சர் விஜய்க்கு தெரிந்தது எல்லாமே திரிஷா மட்டும்தான் என்பது போன்று காவிரி தண்ணீர் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள் என்றால் எப்பொழுதும் திரிஷாவை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்என்று பேசியது சமூக ஊடகங்களில்  பேசுபொருளாகியது. இதன் காரணமாக தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் உதயகுமாரை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo