இன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யக்கோரி தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

by Admin / 11-08-2026 01:29:46am
இன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யக்கோரி தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

இன்று தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யக்கோரி தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ் நீட் எதிர்ப்பு தனி தீர்மானத்தை சட்ட சபையில் முன்மொழிய உள்ளார். இதனோடு சிறுபான்மையினரை பாதிக்கும் எஃப் சி ஆர் ஏ சட்ட திருத்தத்திற்கும் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. நீட் தேர்வானது சமூகநீதி சமத்துவத்திற்கு எதிரானது என்றும் இது கிராமத்தைச் சார்ந்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிப்பதாகவும் தீர்மானத்தில் சொல்லப்பட உள்ளது. கல்வி பொது பட்டியலில் இருப்பதின் காரணமாக நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளை முடிவெடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo