ஏட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை : பெண் எஸ்.ஐ. யின் கணவர் கைது

நெல்லை பேட்டை காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் அமுதா ராணி. இவரது கண ர் வனராஜ் (55). இவர்கள் பாளை பெருமாள்புரம் பொதிகை நகரில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வனராஜ், அதே குடியிருப்பில் வசித்த ஏட்டு ஒருவரின் 35 வயது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.ஐ.யின் கணவர் மீது பெருமாள்புரம் போலீசில் ஏட்டு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வனராஜ், ஏட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டடது. இதையடுத்து, வனராஜ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் பொருமாள்புரம் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர். பின்னர்நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பெண் எஸ்.ஐ அமுதா ராணியின் கணவர் வனராஜ் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : ஏட்டு மனைவிக்கு பாலியல் தொல்லை : பெண் எஸ்.ஐ. யின் கணவர் கைது