by Staff /
10-07-2023
12:27:06pm
கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து யூமா உள்ளிட்ட பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதுவரை வெள்ளம், நிலச்சரிவு போன்ற பல்வேறு சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வடமாநிலங்களில் பெய்து வரும் மழை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
Tags :
Share via