அடங்காத மோகம் கள்ளகாதலில் பிறந்த இரு பச்சிளங்குழந்தைகளை கொன்ற ஜோடிகைது

by Editor / 07-04-2022 02:29:43pm
அடங்காத மோகம் கள்ளகாதலில் பிறந்த இரு பச்சிளங்குழந்தைகளை கொன்ற ஜோடிகைது

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைக்குபட்ட வீராசிகாமணி அருகிலுள்ளது நொச்சிகுளம் கிராமம் இந்த கிராமத்தை  சேர்ந்தவர் முத்துமாரி இவருக்கு அவரது கணவர் மாடசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து  சென்னையில் மாடசாமி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் முத்துமாரி கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.இந்தநிலையில் முத்துமாரிக்கும் வடநத்தம்பட்டியை  சேர்ந்த  சசிக்குமார் என்பவருக்கும்  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் 2018 ஆம் ஆண்டு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த விசயம் வெளியே தெரியக்கூடாது என எண்ணிய கள்ளக்காதல்ஜோடி  இருவரும் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து அந்த கிராமத்தின்  நிர்வாக அதிகாரி கருப்பசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில்  நான்கு ஆண்டுகளாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கள்ளக்காதல்ஜோடி  கடந்த 27 ஆம் தேதி பிடிபட்டனர். இதுகுறித்து சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல கொடூர சம்பவங்கள் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணையில் முத்துமாரியும் சசிக்குமாரும் 2018 ஆம் ஆண்டு ஒரு குழந்தையையும் 2019 ஆம் ஆண்டு ஒரு குழந்தையையும் கொலை செய்த கொடூரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2019 ஆம் ஆண்டு பிறந்த குழந்தையை 3 நாட்கள் ஆன நிலையில் முத்துமாரியின் வீட்டின் அருகே புதைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்த 3 நாட்கள் வயதுடைய குழந்தையை புதைத்த இடத்தை காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இன்று கண்டெடுத்தனர். புதைத்து 3 ஆண்டுகள் ஆனதால் உடல் மக்கி எழும்பு கூடு மட்டுமே இருந்த நிலையில் அது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பச்சிளங்குழந்தைகள் என்று கூட பாராமல் இரு குழந்தைகளை கள்ளக்காதல்ஜோடி  கொலை செய்த கொடூர சம்பவம் சேர்ந்தமரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அடங்காத மோகம் கள்ளகாதலில் பிறந்த இரு பச்சிளங்குழந்தைகளை கொன்ற ஜோடிகைது
 

Tags :

Share via

More stories