மக்கள் ஆதரவைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆளவிட வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் காலையில் ஆளுநரை சந்தித்து நாளை பதவி ஏற்பு நிகழ்வை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஆளுநரிடமிருந்து எந்தவிதமான அழைப்பும் வராததால் இரண்டாவது முறையாக அவரை சந்தித்தனர். ஆனால், அவரை சந்தித்து வெளியே வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த காண்பாய் வாகனங்கள் திரும்ப பெறப்பட்டிருந்தன. அதனால் அவருடைய நீலாங்கரை வீட்டிற்கு அவருடைய வாகனத்தில் தனியாக வரவேண்டிய சூழல் உருவானது. பொதுவாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள கட்சியின் தலைவருக்கு கால்வாய் வாகனங்கள் 24 மணி நேரத்திற்குள் அளிக்கப்பட வேண்டும். அப்படித்தான் அவருக்கு நேற்று கால்வாய் வழங்கப்பட்டிருந்தது. நாளை பதவி ஏற்பார் என்கிற நிலையில் காலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆளுநரை சந்தித்த பிறகு எந்த விதமான தகவலும் வராததால் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதனால் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் பதவி ஏற்பதில் சிக்கல் நிகழ்ந்துள்ளது. 108 உறுப்பினர்களின் ஆதரவு பட்டியலும் காங்கிரசின் 5 பேர் கொண்ட பட்டியலுமாக சேர்த்துஆளுநரிடம் வழங்கப்பட்டது. 118 பேர் ஆதரவு கடிதங்கள் இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் தரப்பு சொன்னதாக தகவல். இந்நிலையில், காலையிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏ குழுவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். சி.வி. சண்முகம் நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் சந்தித்து தமிழக வெற்றி ககத்திற்கு ஆதரவுநல்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதற்கு அதிமுக தலைமை ஏற்றுக் கொள்ளாதததால் சி.பி. சண்முகம் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவரை எஸ்.பி. வேலுமணி இரண்டு முறை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில், அதிமுக தன்னுடைய எம்.எல்.ஏக்ள் க புதுச்சேரியில் இரண்டு நாள் வரை தங்க வைத்துள்ளனர். சென்னைக்கு இரண்டு நாளில் வந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனோடு அதிமுக தரப்பு உயர் அதிகாரிகளுடன் பேசியதாகவும் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதின் காரணமாக ,அதிமுக ஆட்சி அமைக்க திமுக கூட்டணி ஆதரவை நிபந்தனையற்ற நிலையில் பெற வேண்டும் என்கிற முனைப்பும் காட்டப்பட்டு ,அதற்குரிய பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் தகவல். எதிர் எதிராக இயங்கி வந்த இரண்டு இயக்கங்களும் கைகோர்த்து இருப்பதாக சொல்லப்படுவது அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது
தமிழக வெற்றி கழகத்திற்கு இன்னும் ஆறு பேர் மட்டுமே ஆதரவு அளிக்க வேண்டிய நிலை.. இரண்டு கூட்டணி கட்சிகள் தவிர்த்து சுயேச்சை என்கிற நிலையில் யாரும் இல்லாததால், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகம் காங்கிரசின் ஆதரவை பெற்றதிலிருந்து. சிக்கலுக்குள் சென்றுள்ளது. அதன் வெளிப்பாடுதான் ஆளுநர் அழைப்பு வராததும் கான்வாய்கள் திரும்பப் பெற்றதும் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புற்குஆளாகியுள்ளது. பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு 108 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற கட்சியை ஆழ விடாமல் தடுக்கின்ற பொழுது மக்கள் மீண்டும் அதற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது மிகுந்த கோபத்திற்கு ஆளாவார்கள்.
ஜனநாயக நாட்டில், இவர்கள்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.. அதனால் மக்கள் ஆதரவைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆள விட்டு அதனுடைய செயல்பாடுகள் திருப்திகரமாக- ஆரோக்கியமாக இல்லாத பொழுது அதற்கு எதிராக செயல்பட்டால், மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்று தங்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு மீண்டும் வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால், மக்கள் விரும்பி வாக்களித்தவர்களை ஆட்சி செய்ய விடாமல் தடுத்தால் ,மக்கள் மிகுந்த கொதிப்பிற்கு ஆளாகி, எதிர் வினை ஆற்ற தயங்க மாட்டார்கள். இதனை, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அறிய வேண்டும். திமுக கூட்டணியில் இருந்து 5 எம்.எல்.ஏக்களை எம்.பி பதவிகளையும் பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் உறவாடிய ஒரு கட்சி திடீரென்று இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக கூட்டணி உறவை முறித்து சென்றிருக்கிற நிலை கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்ற நிலையில், இப்பொழுது ஒரு கட்சியை ஆள்வதற்கு வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு எதிராக செயல்படாமல் இருப்பது நல்லது
Tags :


















