புதிய நடுவர் மன்றம் அமைக்க கேட்பது தமிழ்நாட்டின் நீர் உரிமைகளை நாமே அடகு வைப்பதற்கு சமம்.

by Admin / 21-06-2026 03:49:08pm
புதிய நடுவர் மன்றம் அமைக்க கேட்பது தமிழ்நாட்டின் நீர் உரிமைகளை நாமே அடகு வைப்பதற்கு சமம்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேகதாது அணை விவகாரத்தில் புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதோடு மேகதாது அணை சிக்கலில் தமிழ்நாட்டின் பக்கம் முழு நியாயம் உள்ளது.  அதை விடுத்து மத்திய அரசிடம் புதிய நடுவர் மன்றம் அமைக்க கேட்பது தமிழ்நாட்டின் நீர் உரிமைகளை நாமே அடகு வைப்பதற்கு சமம் என்றும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி கடைமடை மாநில மாலா தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக எந்த புதிய கட்டுமானத்தை மேற்கொள்ள முடியாது என்றும் இந்த வலுவான சட்ட பின்னணி இருக்கும்போது புதிய மன்றம் கோர்வது தேவையற்ற சிக்கல்களை உருவாக்க வேண்டும் தமிழ்நாடு அரசே புதிய நடுவர் மன்றம் கோர்வது நாமே நமது தலையில் தலையின் வாயில் கொடுப்பதற்கு சமம் என்றும் விமர்சித்துள்ளதோடு தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட அரசின் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில் தனி நடுவர் மன்றம்கோரும்அம்சம் சேர்க்கப்பட்டது இந்த தனி நடுவர் மன்றம் குறித்த பகுதியை சட்டப்பேரவை விதிகளின்படி நீக்கிவிட்டு, அதன் பிறகு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அன்புமணி தன் வேண்டுகோளை வைத்துள்ளார். மேகதூது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர் சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் மூலமாக மட்டுமே முழுமையாக பாதுகாக்க முடியும் என்றும் அவர் தன் கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via
Logo