இன்று அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன் ஸ்டாக் நகரில் தொடங்கியுள்ளது.
இன்று அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன் ஸ்டாக் நகரில் தொடங்கியுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோருக்கு இடையே கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதே இப்பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கமாகும்.
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 4 மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் முக்கிய மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டுள்ளன
அமெரிக்கா: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையில், அதிபரின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய குழு.,ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி
ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல்.
லெபனானில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே நிலவும் மோதல்கள் மற்றும் அங்கு நிரந்தர போர்நிறுத்தத்தைக் கொண்டு வருதல்.
.அண்மையில் ஈரான் முடக்குவதாக அறிவித்த, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைவழியிலான பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து.
.ஜூன் 19 அன்று நடைபெறவிருந்த இப்பேச்சுவார்த்தை, லெபனானில் ஏற்பட்ட திடீர் மோதல்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியுள்ளது.
Tags :



















