பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பை சிவாஜி பார்க் மயானத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
இந்திய திரை உலகில் தம் காந்த குரலால் ரசிகர்களை ஈர்த்த பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பை பிரிஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக நேற்று மும்பையில் காலமானார். இன்று மாலை 4:00 மணி அளவில் மும்பை சிவாஜி பார்க் மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. பொதுமக்களும் திரை திரையினரும் அஞ்சலி செலுத்துவதற்கு மும்பை லோயர் பரேலில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு அவருக்கு முழு அரசு மரியாதை வழங்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா முதலமைச்சர், திரையுலக பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் , பிரபல தொழில் அதிபர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags :


















