தென்காசி,தூத்துக்குடி ஆட்சியர்கள் அறிவிப்பு.

by Staff / 19-09-2025 11:46:39pm
தென்காசி,தூத்துக்குடி ஆட்சியர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 20, 22,23, மற்றும் 24 தேதிகளில் நடைபெறவிருந்த நேர்காணல் பணியானது அரசிடமிருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகள் பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திருந்தி வயது வரம்பு நிர்ணயம் செய்து பணி நியமனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி. செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 21-09-2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்.  தெரிவித்துள்ளார்

 

Tags : தென்காசி,தூத்துக்குடி ஆட்சியர்கள் அறிவிப்பு.

Share via

More stories