30-ஆயிரம் டன் நிலக்கரி வந்ததால் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 4-யூனிட்கள் மின் உற்பத்தி
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடுமையான நிலக்கரி தட்டுபாடு நிலவிய நிலையில் நேற்று காலை 4-யூனிட்கள் நிறுத்தப்பட்டு 1-யூனிட் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.இதனைத்தொடர்ந்து
விசாகபட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 30-ஆயிரம் டன் நிலக்கரி வந்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் 4-யூனிட்கள் மின் உற்பத்தி துவங்கியது.தற்போது அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Tags :