தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொலை தொடர்பாக இருவர் சீர்காழி நீதிமன்றத்தில் சரண்

by Staff / 21-09-2022 05:39:02pm
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொலை தொடர்பாக இருவர் சீர்காழி நீதிமன்றத்தில் சரண்

தஞ்சாவூர் மாவட்டம்  மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை அருகே நேற்று முன்தினம் பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த பிரேம்(வயது31) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து  நடுக்காவேரி காவல்  நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளை போலிசார் தேடி வரும் நிலையில்

இக்கொலை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் ராம்ஜிநகர் பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்-35 மற்றும் விலாங்கன் பகுதியை சேர்ந்த தேவராஜ்-35 ஆகிய இருவரும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 

Tags :

Share via

More stories