வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் மீன் வளர்ப்புக்கு மானியம்

by Admin / 04-08-2021 02:33:13pm
வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் மீன் வளர்ப்புக்கு மானியம்



   
மீன் வளர்ப்பு மானியம் பெற சொந்த நிலம் அல்லது 5 ஆண்டு குத்தகைக்கு பிடித்த நிலம் வைத்திருக்க வேண்டும்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் மீன்வளர்ப்புக்கான மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.7லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்ப்பு குளம் அமைத்தால் 50 சதவீதம் மானியமாக, ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். அத்துடன் ரூ.1.50 லட்சம் மதிப்பில் மீன்குஞ்சுகள், தீவனம் வாங்க 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரம் என ரூ.4.10 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பு மானியம் பெற சொந்த நிலம் அல்லது 5 ஆண்டு குத்தகைக்கு பிடித்த நிலம் வைத்திருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் தாராபுரம் நல்லதங்காள் ஓடை அணை அருகே உள்ள கோனேரிபட்டியில் இயங்கும் மீன்வள ஆய்வாளரை ( 96291 91709) தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மீன்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை 0424 2221912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via