காவல்நிலையம் முன் தற்கொலைக்கு முயன்ற 2 சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடுக்காவிரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு என்பவரை சாராயம் விற்பனை செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அய்யாவுவின் மகன் தினேஷ் அந்த இளைஞர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நடுக்காவேரி காவல்நிலைய காவலர்கள் தினேஷை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், தினேஷின் சகோதரி மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதால், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.காவல் ஆய்வாளர் சர்மிளா மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்.
Tags :