கன்னியாகுமரி மாவட்டத்தின் 53வது ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்றார். 

by Editor / 21-07-2024 10:45:47am
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53வது ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்றார். 

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு 1956_ம் ஆண்டு நவம்பர் 1 ம் நாள் இணைக்கப்பட்டபின், ஆட்சியாளர்கள் வரிசையில், முதல் பெண் ஆட்சியாளராக டாக்டர். சொர்ணா வை தொடர்ந்து மதுமதி, ஜோதி நிர்மலா  வரிசையில்.குமரியின் 4 வது  பெண் ஆட்சித்தலைவராக அழகு மீனா கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாம்பரம் ஆணையராக பணியில் இருந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் இரண்டு வருடங்களாக குமரி மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கன்னியாகுமரி மாவட்டத்தின் 53வது ஆட்சியராக அழகு மீனா பொறுப்பேற்றார். 

Share via

More stories

Logo