மதுரை எய்ம்ஸ் - செங்கல்லை தூக்கிய அண்ணாமலை

by Staff / 20-08-2023 03:49:55pm
மதுரை எய்ம்ஸ் - செங்கல்லை தூக்கிய அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று 20-வது நாள் பயணத்தை தொடங்கிய அண்ணாமலை மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாணியில் எய்ம்ஸ் செங்கலை தூக்கி காட்டினார். மேலும், நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்குவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். நெல்லையில் நீங்கள் சித்த மருத்துவ கல்லூரியை பார்த்தது உண்டா? என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via