ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்பதக்கங்களை வென்று சாதனை படைத்ததை முதலமைச்சர் விஜய் பாராட்டிவிருந்தளிக்கிறாா்.
ஜப்பானில் நடந்த இருபதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் பதக்கங்களை வென்று சாதனை படைத்ததை பாராட்டு முகமாக முதலமைச்சர் விஜய் இன்று அவர்களை நேரில் அழைத்து பாராட்டுகிறார். இந்நிகழ்வு சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை நடைபெறுகிறது. இவ் பாராட்டு விழாவில் சாதனை புரிந்த வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுத் தொகைக்கான காசோலை- சான்றிதழ்கள்- நினைவு பரிசுகள் வழங்கப்படுவதோடு இரவு முதலமைச்சர் விஜய் சாதனை புரிந்து பதக்கம் பெற்ற வீரர்களுக்கு-வீராங்கனைகளுக்கு இரவு விருந்தும் அளிக்கிறாா்.. ஆசிய போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் 2 தங்கம் 3 வெள்ளி 10 வெண்கலம் மொத்தம் 15 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















