"கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா ? " -
டில்லியில் மாஸ்க் ஏன் போடாமல் வந்தீர்கள் என போலீசார் எழுப்பிய கேள்விக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் காரசாரமாக விதன்டாவாதம் செய்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்." மாஸ்க் " பிரச்சனைதர்யாகஞ்ச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு இளம் தம்பதியினர் காரில் வந்தனர். இருவரும் மாஸ்க் அணியவில்லை. இது தொடர்பாக போலீசார் அறிவுரை வழங்கினர். அபராதம் போடுவதாக எச்சரித்தனர். இதில் ஆவேசமுற்ற கணவனும், மனைவியும் போலீசார் கடுமையாக திட்டினர்.எனது காரை மறிக்கீறீர்கள் ,' நான் எனது கணவரை முத்தமிடுவேன் நீங்கள் என்னை தடுக்க முடியுமா ? ' என்றும் அந்த பெண் கேட்டதும் போலீசார் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முறையாக வழக்கு பதிவு செய்து கணவன் பங்கஜ்தத்தாவை கைது செய்தனர். இந்த பெண்ணையும் விரைவில் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Tags :