காவல்துறை மானியக்கோரிக்கையில் முதலமைச்சர் அறிவிப்பு

by Staff / 21-04-2023 02:39:18pm
காவல்துறை மானியக்கோரிக்கையில் முதலமைச்சர் அறிவிப்பு

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி காவல் நிலையங்கள், சேலம் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கோவை மாவட்டம் துடியலூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் அணைக்கட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo