இளைஞர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ. - நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்ற சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனிடம் சாலை வசதி செய்துதராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள் என இளைஞர்கள் கேட்டனர். அதற்கு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார். உதயசூரியனின் இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்றார்.
Tags :