ஆக.20இல் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

by Staff / 11-08-2023 12:36:13pm
ஆக.20இல் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 20ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ ஆடிட்டோரியத்தில் ஆக.20ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.அபன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo