போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்

by Staff / 11-08-2023 12:39:16pm
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு சுமையாக மாறியுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் எதிர்காலத்தை இழக்கின்றனர். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா இல்லாத தமிழகம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via