மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்-பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன்.
சீனா சிகரெட் லைட்டர் விஷயத்தில் மத்திய அரசு துணிச்சலாக முடிவெடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று சீனா சிகரெட் லைட்டரை தடை செய்துள்ளனர் - பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் பேட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிரணி தேசிய தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் உள்ளிட்;டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நூற்றாண்டு விழா பணிகளை பாஜக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் பெரும்பகுதி கோவில்பட்டி மற்றும் சாத்தூர் பகுதியில் தான் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து வந்த சிகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டது
இந்த பிரச்சினை குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் மற்றும் தொழில் வர்த்தக அமைச்சரிடம் முறையிட்டோம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு வரிவிதிப்பு உயர்த்தப்பட்டது.தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கப்பட்டது.இருந்த போதிலும் சீனா சிகரெட் லைட்டர் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இங்கேயே தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினர்.இதுகுறித்து மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றோம்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்.அவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் குறித்து நன்கு அறிந்தவர்,ஆகவே மத்திய நிதி அமைச்சர் தீப்பெட்டி விவகாரத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு சீனாவின் சிகரெட் லைட்டர்களை தடை செய்தார்.சீனாவில் இருந்து வரக்கூடிய பல பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
சீனாவில் இருந்து வரும் சில்க் அதை தடை செய்ய வேண்டும், சீனாவில் இருந்து வரும் ஸ்டீல் தடை செய்ய வேண்டும் என ஒவ்வொரு துறையில் இருந்தும் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை இருக்கு. இதெல்லாம் அரசின் பரிசீலனையில் இருக்கு. அப்படி எல்லாவற்றிக்கும் தடை விதிக்க முடியாது.
வர்த்தகம் என்பது உலகளவியது. எல்லா பொருட்களுக்கும் தடை விதிக்க முடியாது. சீனாவில் இந்திய பொருட்களுக்கு தடை விதித்தால் அது நம்மை பாதிக்கும்,சீனா சிகரெட் லைட்டர் விஷயத்தில் மத்திய அரசு துணிச்சலாக முடிவெடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று இதை தடை செய்துள்ளனர்.சீனா சிகரெட் லைட்டர்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டதால் தீப்பெட்டி தொழில் மீண்டும் பொலிவு பெற்றது.கோவில்பட்டி நடைபெறும் தீப்பெட்டி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிறார்.இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், தீப்பெட்டி தொடர்பான கண்காட்சி,, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.
Tags : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்-பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் பேட்டி:



















