ரயில் பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை  வீச வேண்டாம்

by Editor / 03-06-2023 02:00:01pm
ரயில் பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை  வீச வேண்டாம்

ரயில் பயணிகள் ரயில் நிலையம் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை  வீச வேண்டாம் என்று வேண்டுகோள்

ரயில்வே ஸ்டேஷன், ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சியில் பயணிகள் ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறு  கோட்ட ரயில்வே மேலாளர் திரு  பி.அனந்த், பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். உலக சுற்றுசூழல்  தின கொண்டாட்டங்கள் தொடர்பாக  அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்  ரயில்களில் இருந்து கழிவுகளை யார்டில்  வீசுவதைத் தவிர்ப்பதில் பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர்  வலியுறுத்தினார். ரயில் நிலையங்களில் தற்போது தூய்மை பெருமளவில் மேம்பட்டிருப்பது பயணிகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் மட்டுமே  என்று அவர்  மேலும் கூறினார். ரயில்  நிலையங்களில் காணக்கூடிய சுத்தமான சுற்றுப்புறச் சூழலுக்கு முக்கியக் காரணம், பயணிகள் ரயில் நிலையங்களில் இதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கழிவுகளை இடுவதில் காட்டும் விழிப்புணர்வாகும். குப்பைத்தொட்டிகளில் கழிவுகளை இடுவது  ரயில் நிலையத்தின் தூய்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், அத்தகைய கழிவுகளை எளிதில் பிரித்து அகற்றுவதற்கும் வழி வகுத்து, அதன் மூலம் துப்புரவு ஊழியர்களின் பணியை எளிதாக்கவும் செய்கிறது.

ஆனால் , ரயில்களில்  பயணிக்கும் போதோ அல்லது ரயில் நிலையங்களில் நிற்கும் போதோ பயணிகள் குப்பை தொட்டிகளை பயன்படுத்துவதில் அக்கறை காட்டுவவதில்லை என்று குறிப்பிட்டார். அலுமினிய கொள்கலன்களுடன் கூடிய காகிதக் தட்டுகள்  மற்றும் உணவுக் கழிவுகள் ரயில்களிலிருந்து  இருந்து வெளியே எறியப்படுவதை காணலாம்,  இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் யார்டுகள் அழுக்காகவும், அசுத்தமாகவும் மாற்றுகிறது. இவ்வாறு தூக்கி எறியப்படும் கழிவுகள் பெரும்பாலும் திறந்தவெளி நீர் வடிகால்களில் விழுந்து, வடிகால் அமைப்பை அடைத்து, பாதுகாப்பு ஊழியர்களுக்கு கூடுதல் பணியை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி, அலுமினியம் கன்டெய்னர்கள், கேரி பேக்குகள் போன்றவை  ஸ்டேஷன் யார்டு மற்றும் அணுகு சாலைகளில் குவிந்து கிடக்கிறது. இந்த பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்கள் ரயில் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அதிக நுண்திறன்  சிக்னல் இன்டர்லாக் சிஸ்டத்துடன் குறுக்கீடு கொண்டு , சிக்னல் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையைப் பாதிக்கலாம்.

இதனால் ரயில் பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ள  குப்பைத் தொட்டிகளை பயணிகள் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். ரயில் பயணத்தில் உருவாகும் கழிவுகளை முறையாக வெளியேற்றுவது   சிறந்த சுற்றுச்சூழலுக்கும் குறிப்பாக ரயில்வே அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கும் உதவும்.  இவ்வாறு அவர் கூறினார் .

 

Tags :

Share via