மருத்துவ தம்பதியினர் வீட்டில் சடலமாக மீட்பு

கேரளாவின் கோழிக்கோடு அருகே வீட்டுக்குள் மருத்துவ தம்பதியினர் இறந்து கிடந்தனர். டாக்டர் ராம் மனோகர் (75), மனைவி டாக்டர் ஷோபா மனோகர் (68) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்கொலை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மருத்துவர் தம்பதியின் தற்கொலைக் கடிதத்தில், அவர்கள் தீராத உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்கள் மகள், மருமகனுக்கு பாரமாக இருக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவருமே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :