குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று புதுச்சேரி வருகிறார்.

by Editor / 07-08-2023 08:21:59am
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று புதுச்சேரி வருகிறார்.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு இன்று காலை 10 மணியளவில்
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார்.

தொடர்ந்து ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சிலேட்டர் என்ற உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

நாளை  (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசு தலைவர் வருகையையொட்டி புதுச்சேரியில்
1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடியரசு தலைவர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள.

 

Tags :

Share via

More stories