வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு.

by Editor / 28-04-2025 08:30:15am
வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூரில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. மதுரையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர் மணிவேல் என்பவர், வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து, தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

Tags : வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு.

Share via