நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்

போதை பொருள் வழக்கில் கடந்த 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க வழக்குத்தொடர்ந்தனர். அவ்வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனு அளித்திருந்தனர். தற்போது, மறு உத்தரவு வரும் வரை இருவரும் அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன் ஐகோர்ட் ஜாமீன் உத்தரவிட்டுள்ளது.
Tags :