கனிமவளங்கள் திடீர் விலை ஏற்றம்.. பொதுமக்கள் கடும்அவதி..

by Editor / 03-05-2023 10:41:28pm
கனிமவளங்கள் திடீர் விலை ஏற்றம்.. பொதுமக்கள் கடும்அவதி..

தென்காசி மாவட்டத்தில்  உள்ள பல்வேறு குவாரிகளில் 02.05.2023 முதல் திடீர் விலை ஏற்றத்தை அறிவித்து உள்ளார்கள். அதன் பட்டியல் வருமாறு:

M.சாண்ட் (கருப்பு)
பழைய விலை-2800
புதிய விலை-3300

3/4ஜல்லி
பழைய விலை-2000
புதிய விலை-2400

1/2ஜல்லி
பழைய விலை-1800
புதிய விலை-2300

கிரசர்ப்பொடி
பழைய விலை-1900
புதிய விலை-2400

ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 300 முதல் 500 ரூபாய் வரை நேற்றுமுதல் விலை அதிகமாகி இருக்கிறது. இந்த விலையேற்றம் தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றுமுதல் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் வீடு கட்டும் தொழிலாளர்கள், அரசு ஒப்பந்தகாரர்கள், ஹாலோபிளாக் மற்றும் பிளைஆஷ் செங்கல் தயாரிப்பவர்கள்  இந்த திடீர் விலையேற்றத்தினால் கடும் அவதிக்கு ஆளாகிஉள்ளனர்.முதலில் கேரளா வாகனங்களுக்குமட்டும்தான் இந்தவிலையேற்றம் என்ற நிலைமாறி உள்ளூர் வாகனங்களுக்கும் இதுதான் விலை என தெரிவிக்கபட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo