இந்து சமய அறநிலைத்துறைகோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க தமிழக அரசு ஏழு பேர் கொண்ட குழு
இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள 10 லட்சத்திற்கும் மேல்வருவாய் உள்ள முக்கிய கோவில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களை நியமிக்க தமிழக அரசு ஏழு பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் கோவில்களில் அறங்காவலர்களாக நியமிக்க பட்டவர்களின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய அறங்காவலர்களை தேர்வு செய்து நியமிப்பதற்காக குழுவை அறநிலையத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். இக்குழுவின் தலைவராக மயிலம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலாய சுவாமிகளும் துணைத்தலைவராக டாக்டர் ராமநாதனும் உறுப்பினர்களாக அர்ச்சனா கல்பாத்தி அகோரமும் பி. ஆர். சம்பத்தும் வேல்முருகனும் சுமதி ஸ்ரீ யும் நியமிக்கப்பட்டுள்ளனா். குழு அறங்காவலர் பொறுப்புக்கு விண்ணப்பித்த நபர்களின் தகுதிகளை ஆய்வு செய்யும். அவற்றின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரிப்பு அரசுக்கு சமர்ப்பிக்கும்.
Tags :


















