தகவல் அறியும் உரிமை சட்டம் -தமிழக அரசு பொது துறையின் கீழ் இயங்கும் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணை ரத்து

by Admin / 27-09-2026 08:49:39pm
 தகவல் அறியும் உரிமை சட்டம் -தமிழக அரசு பொது துறையின் கீழ் இயங்கும் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணை ரத்து

தமிழக அரசு செப்டம்பர் 21 அன்று மனிதவள மேம்பாட்டு துறை வழியாக வெளியிட்ட தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் கீழ் ,சட்டம் -ஒழுங்கு பிரிவு  உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தப்பட்டு அதற்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது.. இதன் மூலம் சாதி- மதக்கலவரங்கள், துப்பாக்கிச் சூடு, காவல் நிலைய மரணங்கள், போராட்டங்கள் மற்றும் அரசியல் வழக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை பொதுமக்கள் பெற முடியாத நிலை உருவானது..இதனையடுத்து அரசியல் கட்சிகள்,தவெக கூட்டணிக்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் ,தமிழக அரசு பொதுத் துறையின் கீழ் இயங்கும் சட்டம் -ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo