பாரத ஸ்டேட் வங்கி (SBI) நேரடி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது.
சமீபத்திய அறிவிப்புகளின்படி, பாரத ஸ்டேட் வங்கி (SBI) நேரடி பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது.
, பிப்ரவரி 15, 2026 முதல் ஆன்லைன் ஐ எம் பி எஸ் பணப் பரிமாற்றங்களுக்கும் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன.
மாதந்தோறும் வழங்கப்படும் 5 இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் (நிதி சார்ந்தவை) மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பண எடுப்பிற்கும் ₹23 +ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் (முன்பு ₹21 +ஜிஎஸ்டி . இருப்பு சரிபார்ப்பு அல்லது மினி ஸ்டேட்மெண்ட் போன்ற சேவைகளுக்கு இலவச வரம்பிற்குப் பிறகு ₹11 +ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
இதுவரை வரம்பற்ற இலவசப் பரிவர்த்தனைகளை அனுபவித்து வந்த சம்பளக் கணக்குதாரர்களுக்கு இனி மாதத்திற்கு 10 இலவசப் பரிவர்த்தனைகள் மட்டுமே வழங்கப்படும்.
2, ஐ எம் பி எஸ்
பிப்ரவரி 15, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய ஆன்லைன் ஐ எம் பி எஸ் கட்டணங்கள்
₹25,000 வரை: கட்டணம் இல்லை.
₹25,001 - ₹1,00,000: ₹2 + ஜிஎஸ்டி
₹1,00,001 - ₹2,00,000: ₹6 +ஜிஎஸ்டி
₹2,00,001 - ₹5,00,000: ₹10 +ஜிஎஸ்டி
நேரடியாக கிளைக்குச் சென்று ஐ எம் பி எஸ் செய்தால், ₹1,000 முதல் ₹1 லட்சம் வரை பரிமாற்றம் செய்ய ₹4 +ஜிஎஸ்டி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
3.
ஒரு மாதத்தில் முதல் 4 பணப் பரிவர்த்தனைகள் (கிளை அல்லது ஏடிஎம்) இலவசம். அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண எடுப்பிற்கும் சேவை கட்டணம் உண்டு.
நடப்புக் கணக்கு ஒவ்வொரு மாதமும் கணக்கின் வகையைப் பொறுத்து இலவச பண வைப்பு வரம்பு மாறுபடும். வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹0.75 +ஜிஎஸ்டி (குறைந்தபட்சம் ₹50) கட்டணமாக வசூலிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தைப் பார்வையிடவும்.
Tags :



















