இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

by Editor / 12-11-2022 09:14:31am
இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via