முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர், அது வதந்தி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார், தேடி வந்தனர். தொடர்ந்து, சென்னை அடுத்த திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்தனர்.
Tags : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.