திருவாரூர் மாவட்டத்தில் கனமழை5,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்.

by Staff / 12-10-2025 02:48:13pm
திருவாரூர் மாவட்டத்தில்  கனமழை5,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

 

Tags : திருவாரூர் மாவட்டத்தில் கனமழை5,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்.

Share via