நாளை மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

by Admin / 22-01-2026 05:15:58pm
 நாளை  மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தல் பிரச்சாரத்தை நாளை செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பிரதமரோடு அ.திமு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , பாமக நிறுவனர் ராம காசுக்குகூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நரேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையில் பிரதமருடன் பங்கேற்கின்றனர். மதியம் 2. 15க்கு விமான நிலையம் வரும் பிரதமர் 3.00 மணி அளவில் மதுராந்தகம் வந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். என்னைத் தொடர்ந்து அவர் நாலு முப்பதுக்கு பிறகு டெல்லிக்கு திரும்புவார் என்று தகவல். பிரதமர் வருகையை ஒட்டி எஸ். பி .ஜி தலைமையிலான பலத்த பாதுகாப்புடன் ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாதுகாப்பு கருவி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டம் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via