by Staff /
06-07-2023
09:33:58am
ஸ்பெயினின் லா பால்மாவில் உள்ள நோகேல்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலத்தின் சடலத்தில் இருந்து விலைமதிப்பற்ற கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லாஸ் பால்மாஸ் பல்கலைக்கழகம் மற்றும் விலங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கீழ் திமிங்கலத்தின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் செயலில் அவர்களுக்கு அரிய பொக்கிஷம் கிடைத்தது. திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 9.5 கிலோ அம்பர்கிரிஸை விஞ்ஞானிகள் பிரித்தெடுத்துள்ளனர். சந்தையில் இதன் விலை சுமார் ரூ.3 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :
Share via