by Staff /
06-07-2023
09:28:49am
வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முயன்ற ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் அக்கரையின் அருகே சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். சிலர் கயிற்றின் உதவியுடன் ஆற்றை கடக்க முயன்றனர். இதனிடையே எதிர்பாராத விதமாக ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். எனினும் அந்த நபர் காப்பாற்றப்பட்டதாக மீட்புக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Tags :
Share via