செல்போன்  ஹேக்கிங் தெரியுமா?

by Editor / 28-07-2021 07:25:03pm
செல்போன்  ஹேக்கிங் தெரியுமா?

 

செல்போன் ஹேக்கிங் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள து.
ஒரு நாள், 2 நாள் சார்ஜ் நிற்கும் உங்கள் செல்போனில் அண்மை காலமாக பேட்டரி விரைவாக தீர்ந்து விடுகிறதா..? ஆம் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். செல்போனில் பேட்டரி விரைவாக தீர்ந்து போவது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதன் அறிகுறியே.

எனினும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு வேறு செயலிகள் ஏதாவது பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பதையும் ஆராயுங்கள். பின்னணியில் பல்வேறு செயலிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும் செல்போனின் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடும்.
செல்போனை பயன்படுத்தும் போது நீங்கள் பதிவிறக்கம் செய்யப்படாத செயலிகள் ஏதாவது உங்கள் செல்போனில் இருப்பதை பார்த்திருக்கலாம். இதுவும் ஹேக்கர் அல்லது ஸ்பைவேரின் வேலையாக இருக்கலாம்.

செல்போனில் வேகம் திடீரென குறையும். சில சமயங்களில் செல்போன் தானாக அணைந்து ரீ ஸ்டார்ட் ஆகும். இதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்.


நீங்கள் உங்கள் செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது என்பதும் ஹேக்கின் அறிகுறிதான். இதற்கு காரணமாக உங்கள் செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் இந்தளவு அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம்.


உங்கள் செல்போன் விசித்திரமாக செயல்படக் கூடும். செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் எடுக்கலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும்.
உங்கள் செல்போன் திரையில் ஏராளமான பாப்-அப் (Pop-up) தோன்றுவதை நீங்கள் பார்த்திருந்தால், அதுவும் ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறிதான். ஏராளமான விளம்பர லிங்க் உங்கள் திரையில் தோன்றும். இத்தகைய லிங்கை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்து விட வேண்டாம்.


நீங்கள் எடுக்காக புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உங்கள் செல்போன் கேலரியில் இருக்கக் கூடும். உங்கள் செல்போன் கேமரா வேறு ஒரு நபரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்பதன் அறிகுறி இது என்பதால் மிக கவனமாக இருங்கள்.
நீங்கள் செல்போனை பயன்படுத்தாத போதும் அதன் ஃபிளாஷ் லைட் தானாக ஆன் ஆகிறதா? உங்கள் செல்போன் வேறு யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதன் அறிகுறி இது.


நீண்ட நேரம் கேம் விளையாடும் போதும், வீடியோ பார்க்கும் போதும் செல்போன் உஷ்ணம் ஆவது என்பது இயல்புதான். ஆனால், நீங்கள் பயன்படுத்தாத போது உங்கள் செல்போன் அதிக உஷ்ணம் ஆகிறது என்றால், செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

 

Tags :

Share via