ஏ .வி. எம். சரவணன் இன்று காலை காலமானார்.
இன்று காலை ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்தவரும் ஏவி மெய்யப்பச் செட்டியாரின் முதல் மகன் ஏ வி எம் சரவணன் சூர்யா மணி தனது 85 ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். தன் தந்தையை பின்பற்றி தமிழ் முன்னணி தயாரிப்பாளராக விளங்கியவர். நானும் ஒரு பெண் ,சம்சாரம்அது மின்சாரம், சிவாஜி, தி பாஸ், வேட்டைக்காரன் ,மின்சார கனவு ,அயன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர். இரண்டு முறை அவர் சிறந்த தயாரிப்பாளருக்கான பிலிம் பேர் விருதை வென்றவர்., 1986இல் இவர் சென்னை செரிப் ஆகவும் திகழ்ந்தவர். தமிழ் மட்டுமல்லால் இந்திய மொழிகளில் 175க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பது ஈடுபட்டவர். 2000 வரை பல தயாரிப்பில் மும்முரமாக இருந்தவர். இவர் எடுத்த அனைத்து படங்களும் வணிக ரீதியாகவும் மக்களின் பாராட்டுதலையும் பெற்ற படங்களாகும். எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். சுய தன்னடக்கம் காரணமாக எப்பொழுதும் முன் பக்கத்தில் கைகளை கட்டியவாரே பணிவாக பேசுகிற பழக்கம் உடையவர். இந்திய திரைப்படங்கள் பற்றிய தொழில்நுட்பங்களை வரும் தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை ஆவணப்படுத்தும் முயற்சியாக அருங்காட்சியகம் ஒன்றை தம் ஸ்டுடியோவில் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மகன் எம் .எஸ் குகன், இவரும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டவர்.இன்று மாலை அவரது உடல்தகனம் செய்யப்படவுள்ளது.
Tags :


















