அரக்கோணத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை:

by Editor / 03-04-2025 01:39:46pm
அரக்கோணத்தில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு தற்கொலை:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நிதி நிறுவனத்தில் பல லட்சங்களை இழந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் தூக்கிட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்தவர் உதயகுமார் (36). இவருக்கு ரேகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். உதயகுமார் தெற்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிப்புரிந்து வந்தார்.இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. திடீரென ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொல்லையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து நேற்று மதியம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீராத வயிற்றுவலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து நகர காவல்துறையினர்  விசாரனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via