பெண் வேட்பாளர்களை அதிகம் களமிக்கிய கட்சியாக திரிமுணால் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது..

by Admin / 18-03-2026 10:38:04am
பெண் வேட்பாளர்களை அதிகம் களமிக்கிய கட்சியாக திரிமுணால் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது..

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,முதலமைச்சர்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 291 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 52 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன்) மற்றும் ஸ்ரேயா பாண்டே  ஆகியோர் மற்ற முக்கிய பெண் வேட்பாளர்கள் ஆவர்.மொத்தமுள்ள 291 வேட்பாளர்களில் 95 பேர் பட்டியலினமற்றும் பழங்குடியினசமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 47 இடங்கள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.எஞ்சிய 3 தொகுதிகள் கூட்டணிகட்சியான பாரதிய கோர்க்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சா  கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இளைஞர்மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு எம்.எல்.ஏ-க்களில் 135 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,  அதே சமயம் 74 பேருக்கு வாய்ப்புவழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளான பாஜக 11 பெண்களையும், இடதுசாரிகள் 28 பெண்களையும் மட்டுமே வேட்பாளர்களாக அறிவித்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் 52 பெண்களை நிறுத்தி பெண் பிரதிநிதித்துவத்தில் முன்னிலை வகிக்கிறது.

 

Tags :

Share via