கமல் கட்சியில் இருந்து விலகிய சி.கே.குமரவேல் காங்கிரஸில் இணைய முடிவு ?
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் விரைவில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது என்பதும் அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல பிரபலங்கள் விலகினர். குறிப்பாக அக்கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் விலகி திமுகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு தற்போது திமுகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டாக்டர் மகேந்திரனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் விரைவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் அவருடன் மேலும் சில பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி பல தலைவர்கள் திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் இணைந்து வருவது அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :