பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் .

by Admin / 05-03-2026 01:11:58am
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் .

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதீஷ் குமாருக்கு பதிலாக பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகாரின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இ. தருணத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் அவர் பீகாரின் துணை முதலமைச்சர் அல்லது கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வரக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. நிதீஷ் குமாரின் இந்த முடிவு பீகார் அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via