மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

by Admin / 07-02-2026 01:36:44am
மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மேகாலயா மாநில கிழக்கு ஜெயின்டியா சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். உம்ஸ்ங்காட் கிராமத்தின்  தாங்ஸ்கு பகுதியில் உள்ள "ரேட்-ஹோல்"நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது .விபத்து  நடந்த வியாழக்கிழமை 18 உடல்கள் மீட்கப்பட்டன.  வெள்ளிக்கிழமை  மேலும்  7  உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத்  தொடர்ந்து  மொத்த பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தேசிய மற்றும்  மாநில  பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். இந்தச் சட்டவிரோத  சுரங்கத்தின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா உயர்நீதிமன்றம் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேகாலயா சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
 
Tags :

Share via

More stories