இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11 ஆவது நிர்வாக குழு கூட்டம் .
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது டில்லியில் குடியரசு தலைவர் கலாச்சார மாளிகையில் நிதி ஆயோக்கின் 11 ஆவது நிர்வாக குழு கூட்டம்.. தமிழக முதலமைச்சர் விஜய் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் மனித மேம்பாடு உள்ளடக்கிய வளர்ச்சி குறித்தும் 2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாக உயர்த்தும் நோக்கத்தின் அடிப்படையில் மாநிலத்தின் ஒத்துழைப்புக்களோடு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் புதிய சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதற்கான வழிகள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தரவு சார்ந்த மேலாண்மை முறை போன்றவற்றை ஆரம்ப நிலையில் இருந்து செயல்படுத்துகிறார் நிலைப்பாடு ஐந்தாவது தேசிய மாநாட்டின் பொழுது பரிந்துரைக்கப்பட்ட ஆரம்பக் கல்வி பள்ளி மற்றும் உயர் கல்வி சீர்திருத்தங்கள் விளையாட்டு மேம்பாடு ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். இக்கூட்டம் நிறைவுற்ற பின்பு இரவு 7:00 மணிக்கு அனைத்து முதலமைச்சர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து வழங்குகிறார்.
Tags :


















