தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை

by Staff / 30-10-2022 01:08:29pm
 தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கு திடீர் எச்சரிக்கை

மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அக்டோபர் 30, 31, நவம்பர் 1, 2 ஆகிய 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories