வங்க கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது .
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மேற்குவங்க கடலோர பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது மாறக்கூடும் என்றும் இந்திய வானிலே ஆய்வு மையம் கணித்துள்ளது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கனமழைக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவக்காற்று காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்யும். நீலகிரி. தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரே ஒரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் இடம் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதிகபட்ச வெப்பநிலை 36-.37 சி ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 c ஆகவும் பதிவாகக் கூடும். வங்க கடலின் வடமேற்கு மத்திய மேற்கு பகுதிகள் மற்றும் அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :


















