தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக வாக்களிக்க பேரம் 6 பேர் கைது

by Admin / 02-07-2026 10:14:53am
 தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக வாக்களிக்க பேரம்  6 பேர் கைது

தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்ப்பதற்காக கிருஷ்ணகிரி ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல்துறையிடம் அளித்த புகாரி சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டப்பேரவை தலைவர் கொண்டுவரப்படும் தீா்மானத்தின் பொழுது தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் அதற்காக தமக்கு 35 கோடி தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக அவர் தன் புகார் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி திருநாவுக்கரசு நரேஷ், தியாகராஜன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் 6 பேர் செல்வன், சீனிவாசன், ராஜேஷ் ,ரமேஷ், கார்த்திக் மற்றும் அசோக்குமார் என கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்று காவல்துறை தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo