அதிரடியாக குறையும் பெட்ரோல், டீசல் விலை? மத்திய அமைச்சர் தகவல்

by Editor / 18-07-2025 03:23:32pm
அதிரடியாக குறையும் பெட்ரோல், டீசல் விலை? மத்திய அமைச்சர் தகவல்

அடுத்த நிதி காலாண்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படக்கூடும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவிடம் இருப்புள்ள கச்சா எண்ணெய் பேரல் 75 டாலருக்கு வாங்கப்பட்டவை, இது காலியாகி வருகிறது என்று கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 65 டாலராக நீடித்தால், அடுத்த காலாண்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories